நிலாக்கால நினைவுகள் - 15

"காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் -" எனது நேற்றைய இரவுப்பாடல்களில் ஒன்று இதுவாக இருந்தது. மனம் மகிழ்ந்தது. வழக்கம் போல் மனம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்குப் பறந்து சென்றது. இதுவும் அம்பத்தூர் கிருஷ்ணா டென்ட் தான்! பள்ளிப்பாடங்களில் வருகின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படம் என்பதால் பள்ளியில் சிறப்புச் சலுகை கொடுத்து இந்தப் படத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் செல்ல இயலவில்லை. நான்கு நாட்கள் கழித்து மாமா குழந்தைப் பட்டாளங்களைக் கூட்டிச்சென்று காண்பித்த படம் ! விஷயத்துக்கு வருவோம்! 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் மகாகவி பாரதியார் எழுதிய வரிகள் இந்த மகத்தான காதல் கவிதை, சிந்தை மயக்கும் விந்தை புரிந்தது திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையிலும், பி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலா அவர்களின் தேனையொத்த தீங்குரலிலும் ! இதற்குப்பிறகு, இசையறிந்த ஒவ்வொருவரின் உதடுகளிலும், இந்தப்பாடல் புகுந்து புறப்படாமல் இருந்ததே இல்லை எனலாம் ! இந்த இசை மேலாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்...