நிலாக் கால நினைவுகள் - 12

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே" 



இந்த நாட்டியப் போட்டியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ! நீங்கள் பார்த்ததுண்டா ?  இசையும், முகபாவங்களும், பொலபொலவென மத்தாப்பூக் கதிர்களாய் உதிரும் நாட்டியத்தின் விரைவசைவுகளும் என்றும் மனதில் நிற்கும்.  போட்டிக்கேற்ற கேள்வி பதில்களாய் பாடல் வரிகள் ! எப்படித்தான் எழுத முடிந்ததோ என்று வியக்க வைக்கும் ! கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் எளிமையான அதே சமயம் அழுத்தமான வரிகள் ! பி.லீலா மற்றும் ஜிக்கி இருவரின் இனிமையான மற்றும் வளமான குரல்கள் ! மனதை மயக்கும் அற்புதமான இசையை நமக்கு அளித்திருப்பவர் சி. ராமச்சந்திரா.  பத்மினி  மற்றும் வைஜயந்திமாலா இருவரின் மனம் கவரும் நாட்டியம் !  படத்தின் பெயர் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' . 


குறைந்த வசதிகளே கொண்ட கீற்றுக் கொட்டகையில் படத்தைப் பார்த்த அந்தக் காலகட்டங்கள்தான் எத்தனை மகிழ்ச்சியானவை ! இன்று நினைத்தாலும் சுவை குன்றாத சுந்தர நினைவுகள் !  மனதைப் பந்தாட வைக்கும் அந்த இனிமையான இசையும் , துள்ளல் நாட்டியமும் இன்றைக்கு நினைத்தாலும் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன ! 


K.Balaji
August 21 2018


Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......