ரவா உப்புமா தந்த ரம்மிய நினைவுகள் !
நினைவுகளைக் கிளறிவிட்டது இன்றைய காலைச் சிற்றுண்டி ரவா உப்புமா! எனக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான் உப்புமா, அதுவும் மனைவி கையால் என்றால் மிகையில்லை !
ரவா உப்புமா என்றதுமே நினைவில் முந்திக்கொண்டு எழுவது 'தொச்சுத் தாத்தா' என்று பேரன் பேத்திகள் அனைவருமே அன்புடன் அழைக்கும் என் தாத்தா கே.எஸ்.கே. தான் ! சாப்பிடக் கையில் எடுத்ததுமே நினைவுகள் உருளைகளாக உருண்டோடின எனது ஐந்தாம் பிராயத்துக்கு!
இடம்: 15 - A , வைத்தியர் அண்ணாமலை தெரு, மைலாப்பூர், சென்னை . தாத்தா ஹாலில் அமர்ந்திருப்பார் ஒரு சுவரோரத்தில், ஒரு மணை சாய்மானத்திற்கும், ஒரு மணை உட்காரவும், அவற்றின் மேல் தகுதியான தலையணைகளோடும், அருகில் தன் வளைந்த தடியோடும், குடையோடும், ஒரு சில புத்தகங்களோடும் ! காலை ஆறு மணி வேளை! வெய்யில் கால வெளிச்சம் அப்போதே தொடங்கிவிடும் ! 'நமஸ்காரம்' - என்ற சொல் கேட்டுத் திரும்பினார் தாத்தா ! "ஆஹா! நெல்லையப்பரா ! வாருங்கோ! நேத்திக்குத்தான் நெனச்சேன் ரொம்ப நாளா காணுமேன்னு ! உக்காருங்கோ!" என்றவுடன் நெல்லையப்பர் அருகில் சப்பணமிட்டு தாத்தா போட்ட பலகையில் அமர்ந்தார் !
உறக்கத்திலிருந்து எழுந்த நான் அவரைக்கண்டதும் , படுத்த படுக்கையாய் இருக்கும் - நான் என்றும் அம்மா என்றே விளிக்கும், என் பாட்டியிடம் விரைந்தோடிச் சென்று 'அம்மா, நெல்லையப்பர் வந்தாச்சு' என்றேன் ! அப்போது பாட்டி சுழித்துக்கொண்டு சிரித்த சிரிப்பு இன்னும் என் நினைவில்! தாத்தாவும், தன் பங்குக்கு 'அம்மாடி! நெல்லையப்பர் வந்திருக்கார்' என்று உரத்துச் சொன்னார் ! அதாவது, காபி டிபன் ரெடி பண்ணுங்கோன்னு அர்த்தம் ! சற்று நேரத்துக்கெல்லாம் சூடான காப்பி வரும். கோபு (முதல் அத்தையின் மூத்த பிள்ளை - எனது பெரிய அண்ணா) கொண்டுவந்து தருவான். நெல்லையப்பரின் சொந்தக்கதை, சோகக்கதையெல்லாம் கேட்ட தாத்தாவின் உள்ளம் உருகிவிடும்! உள்பக்கம் திரும்பிப் பார்த்து 'அம்மாடி! துளியூண்டு ரவா உப்புமா கெளரிடேன்' என்பார்! அதைக்கேட்ட பாட்டி தனக்குள் பிரலாபிப்பாள், வெளியே கேட்காதபடி "ஆமாம்! ஊரார உபச்சாரம் பண்றதுல ஒண்ணும் கொறச்சலில்லே! ரவா விக்கற விலைக்கு, இங்க இருந்தாத்தானே! பாவம், என் புள்ள காத்தால விடியறச்சே வேலைக்குப் பொறப்பட்டுப் போனான்னா ராத்திரி 11 மணிக்கு வாரான். உழைக்கிற புள்ளைக்கே இங்க ஒண்ணையும் காணும் ! ஊருக்கு உபகாரம்! ஹும் ! இருக்கறத வச்சு பண்ணிக் குடுங்கோடிம்மா" என்று மாட்டுப்பெண்களுக்கு முணுமுணுப்பான உத்தரவோடு முடிப்பாள்!
கொஞ்ச நேரத்தில் அவருக்கு உப்புமா ரெடியாகி வெளியே வரும்! அவர் சாப்பிட்டு பேசி முடித்து வெளியே போனவுடன் தாத்தா "என் புள்ள எனக்கு 45 வயசுலயே உக்கார வச்சு சோறு போடறான் .அவன் புள்ள அவனை இருக்கியா செத்தயான்னு கூட கேக்கறதில்ல. ஒவ்வொருத்தர் ஜாதகம்!" என்று சொல்லிக் கொள்வார் !
கொஞ்சமாகப் பண்ணிய ரவா உப்புமா எனக்கு மட்டும் துளிப்போறக் கிடைக்கும்! பத்து பேர் இருக்கிற வீட்டில் வேறு யாருக்கும் கொடுப்பதற்கு இருக்காது ! அன்றைய நிலைமை அப்படி !
பின்னாளில் கூட நான் கவனித்திருக்கிறேன் . தாத்தாவுக்கு உப்புமா என்றால் உயிர் ! காலையில் பண்ணிக் கொடுத்த உப்புமாவில் கொஞ்சம்போல எடுத்து, தனக்கென வைத்திருக்கும் ஒரு வெண்கல சம்புடத்தில் போட்டு வைப்பார், மத்தியானம் சாப்பிடுவதற்கென்று ! இது என் கல்லூரி நாட்களில் ! சித்தி உள்ளிருந்து புலம்புவாள் "வெண்கல பாத்திரத்துல போட்டு வச்சா கச்சிப்போயிடும். உடம்புக்கு நல்லதேயில்ல! முழுக்க சாப்பிடக்கூடாதோ! அப்புறமா வேணுன்னா கேக்கறது" என்று !
இன்று காலை மனைவி கிண்டிய ரவா உப்புமா என் நினைவுகளையும் மேலிருந்து கீழாகக் கிண்டிக் கிளறி விட்டது ! தொடர்ந்தாற்போல் இளமைக்கால நினைவுகளின் ஊர்வலம் !ஒவ்வொன்றாக அசை போடத் துவங்கினேன் ! வேறு வேலைதான் என்ன?
(நினைவுகள் மலரும்)

உப்புமா கிளறுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே ஒரு உப்புமா பல நினைவுகளை கிளறியிருக்கிறது. அதன் சுவை அற்புதமாய் இருக்கிறது. இல்லாத தன் நிலைமையிலும் எல்லோர்க்கும் தரும் தாத்தாவின் கருணையே அருமை.
ReplyDeleteஎழுத்தின் மேன்மை எங்களையும் அந்தக் காலத்திற்கே அழைத்து போனது. காலத்தை பத்திரப்படுத்த படைப்பால் மட்டுமே முடியும். இது அதை சிறப்பாய் செய்கிறது. பாராட்டுக்கள்ப்பா!