நிலாக்கால நினைவுகள் - 6

'காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு'







இன்று லதா என்ன ஒரு அருமையான பாடலை அனுப்பியிருந்தார் தெரியுமா  !  "காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு" என்ற பாடல்! நினைவுச்சக்கரம் மறுபடி பின்னோக்கிச் சுழல்கிறது.  This particular song takes me back to my school days. I was in my 8th std.  There used to be Sports Day every year , as everyone knows. Sports க்கும் எனக்கும் ஏணி வச்சாக்குட எட்பாது.  ஆனா நான் ஒரு ஸ்போர்ட்ஸ் டே கூட விட மாட்டேன். ஏன் தெரியுமா?  அன்னிக்கு ஜாலியா நாள்முழுக்க ஸ்கூல்ல உக்காந்து சினிமா பாட்டெல்லாம் லவுட் ஸ்பீக்கர்ல  கேக்கலாம்.  இதுல,  ட்ரில் வாத்யார் சுப்பையாவுக்கு நான்  petங்கறதால, அவர்  in charge ல இருக்கற மைக்ஸெட் ஆளுகிட்ட எனக்கு வேணுங்கற பாட்ட கேக்கற  chance எனக்கு கிடைக்கும்  !  400 மீட்டர்ஸ் பசங்க ஓடும்போது இந்தப்பாட்ட போடுவாங்க. சரியாநாலு ரவுண்டு முடியறச்சே பாட்டும் முடியும்.  ரொம்ப பிடித்தது 1000 மீட்டர்ஸ் தான். நிறைய ரவுண்டஸ்  , நிறய பாட்டு ! கட்டித் தங்கம் வெட்டியெடுத்து, திருமணமாம் திருமணமாம்,  தர்மம் தலைகாக்கும், வாங்க வாங்க கோபாலையா, அக்கம்பக்கம் பார்க்காதே, ஜவ்வாது மேடையிட்டு போன்ற, (வீட்டில் கேட்க Ban   பண்ணப்பட்ட) எம்.ஜி.ஆர். படப் பாடல்களையெல்லாம் கேட்டு மகிழ்ந்த காலம் !   Biting the bun, lime and spoon இந்த விசயத்துக்கெல்லாம் பாட்டு கிடையாது. அந்த நேரத்தில் ஃப்ரண்டு உதயகுமார் அவன் பாத்துட்டு வந்த சினிமா கதையெல்லாம் சொல்லுவான். 

 "ஸ்போட்ஸுக்கும் ஒனக்கும் என்னடா சம்பந்தம்?  அந்த ஒரு நாள்ல ஒக்காந்து பரிட்சைக்கு படிச்சா என்ன" ங்கற அத்தையோட குரல் இன்னும் கேட்கிறது. அத்திம்பேர் ஸப்போர்ட்ல  ஸ்போர்ட்ஸ் டே அட்டெண்ட் பண்ணுவேன்.  என்றும் மறக்கமுடியாத அற்புதமான பள்ளி நாட்கள் ! Thanks Latha !

--K.Balaji
July 27 2018

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......