Posts

"அய்யருக்கு இவ்வளோ பெரிய பையனா?"

Image
வருடம் 1973. என் சித்தப்பா கே நடராஜன் அவர்கள் (அய்யர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்) கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் .  கவிஞரைப் பற்றி அவர் என்னிடம் பேசாத நாளில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் வளர்ந்தது சித்தப்பாவிடம் தான் ! அந்த 14 முதல் 22 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் என்னை உருவாக்கி எடுத்தவர் அவர்தான் . எப்படி மனிதர்களிடம் பேசவேண்டும், பழகவேண்டும், நடத்தைகள் எப்படி இருத்தல் வேண்டும் என்று அனைத்தையும் சொல்லித் தந்து மெருகேற்றியவர் அவரே.  கவிஞரிடம் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.  ஒரு சமயம் சித்தப்பாவுக்கு நல்ல காய்ச்சல்.  இரண்டு நாட்களாக வேலைக்கு செல்ல இயலவில்லை . மாதத்தின் முதல் வாரம் . பணத்தேவை . வேலைக்குச் செல்லாததால் சம்பளம் வாங்க முடியவில்லை . அப்போதுதான் கவிஞரின் அலுவலகத்திற்கு போன் செய்து சொன்ன பிறகு என்னை அங்கு அனுப்பிப் பணத்தை வாங்கி வரச்சொன்னார். எனக்கு வயது 20 ஆகியிருந்தாலும் நான் ஒரு மௌனி .அதிகம் பேச பயப்படுவேன். 'இந்த பயமும் கூச்சமும் உனக்கு இருக்கக்கூடாது . நாலு பேரிடம் பேசிப் பழகினால் தான் சரிய...

உலர்ந்த சருகின் உற்சாகம்

Image
உலர்ந்த சருகின் உற்சாகம் ! ************************** உலர்ந்த சருகாகி யோர் மூலையில் விழுந்துவிட்டேன்! பயனற்ற பொருளாகி யோர்  பாரமாய் நின்றுவிட்டேன் ! பட்டயம் கட்டப்பட்ட பல்லக்குக் குதிரை யொன்று பார்க்கவோ ராளின்றிப் பாதையின் ஓரத்தில் பரிதவித்து நிற்கிறது ! காலத்தின் மாற்றத்தால் கண்ணியங்கள் மறக்கப்படும்! கற்பூரம்போலக் காற்றில் கரைக்கப்படும்! என்றாலும் மனத்தின் ஏதோவோர் மூலையிலே நம்பிக்கையின் கீற்றொன்று மெல்லப் புறப்பட்டு மேனியைச் சிலிர்க்க வைக்கும்! மேன்மைகள் நிலைக்கவைக்கும்! கடந்த காலத்தின் சிறப்பெல்லாம் கல்லோவிய மாகிக் களிக்கவைக்கும்! கண்களைக் குளிரவைக்கும்! Above is a translation of the following poem by Lily Swarn: A leaf of life I shrivelled up and aged Useless and burdensome A horse put to paddock Blown away to a corner Soon  to be forgotten A lost hope Copyright Lily Swarn 13.10.2016 Picture by Lily Swarn

நிலாக்கால நினைவுகள் - 16

கிரிதர கோபாலா - மயக்கு மோகனம் Vocal by Smt M.S.Subbulakshmi - Song Giridhara Gopala given below: M S Subbulakshmi's Meera song Giridhara Gopala in WHISTLE. An Excellent rendition.   இம்மியளவும் பிசகின்றி 'விசில்' அடித்துள்ளார். கேட்கும்போது என் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. நான் மறுபடியும் எனது ஐந்தாம் வயதுக்குச் சென்றுவிடுகிறேன். இசை மட்டும் என்னை மயக்கவில்லை, எண்ணங்களும்தான் !  அம்பத்தூர் மௌனஸ்வாமிகள் மடத்து வீட்டில்,  சந்திரா அத்தை,  ஒரு காலை நேரத்தில்  சமையல் பண்ணிக் கொண்டே,  மேலிருக்கும் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தவாறே,  இந்தப் பாடலைத் தன் இனிமையான குரலில் பாடிக் கொண்டிருக்கும் காட்சி கனவுபோல் புகைப்படலங்களிலூடே என் கண் முன்னே விரிகிறது !  என்ன ஒரு மதூரமான குரலும்,  பாடலும்! குமுட்டி அடுப்பில் வேகும் பருப்பு பொங்கி வழியும் சப்தமும் அந்தக் கருகிய வாசனையும் பாடலை அவசரமாய் முடிக்கச் செய்ததின் ஏமாற்றம் என் மனதில் ! நான் பின்னால் நின்றுகொண்டு பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததில் அ...

நிலாக்கால நினைவுகள் - 15

Image
"காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் -" எனது நேற்றைய இரவுப்பாடல்களில் ஒன்று இதுவாக இருந்தது. மனம் மகிழ்ந்தது. வழக்கம் போல் மனம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்குப் பறந்து சென்றது. இதுவும் அம்பத்தூர் கிருஷ்ணா டென்ட் தான்! பள்ளிப்பாடங்களில் வருகின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படம் என்பதால் பள்ளியில் சிறப்புச் சலுகை கொடுத்து இந்தப் படத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் செல்ல இயலவில்லை. நான்கு நாட்கள் கழித்து மாமா குழந்தைப் பட்டாளங்களைக் கூட்டிச்சென்று காண்பித்த படம் ! விஷயத்துக்கு வருவோம்! 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் மகாகவி பாரதியார் எழுதிய வரிகள் இந்த மகத்தான காதல் கவிதை, சிந்தை மயக்கும் விந்தை புரிந்தது திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையிலும், பி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலா அவர்களின் தேனையொத்த தீங்குரலிலும் ! இதற்குப்பிறகு, இசையறிந்த ஒவ்வொருவரின் உதடுகளிலும், இந்தப்பாடல் புகுந்து புறப்படாமல் இருந்ததே இல்லை எனலாம் ! இந்த இசை மேலாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்...

நிலாக்கால நினைவுகள் - 14

Image
"என்னுயிர்த் தோழி கேளொரு சேதி" https://www.youtube.com/watch?v=xjSMyoMJi40 'அமீர் கல்யாணி' ராகம் என்றதும் முதலில் என் நினைவுக்கு வருவது 'கர்ணன்' திரைப் படத்தில் வரும் இந்தப் பாடல்தான் ! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது! கர்ணன் படத்தில் அத்தனை பாடல்களுமே அற்புதம். இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி; பாடல்கள்: கவியரசர் கண்ணதாசன்; இந்தப்பாடலைத் தன் தேனினும் இனிய தீங்குரலில் வழங்கியிருப்பவர் திருமதி பி.சுசீலா அவர்கள். பாடலின் இடையில் ஒரு நீண்ட 'ஹம்மிங்' , நம்மை அப்படியே பிரமிக்க வ ைக்கும், எப்படி இத்தனை நேரம் 'ஹம்மிங்' கொடுக்கிறார் என்று ! என்ன ஒரு திறமை ! மெல்லிசை மன்னர்களின் இசைக்கு எத்தனை அள்ளிக் கொடுத்தாலும் போதாது ! இவர்களின் இசைக்கு அந்தக் கர்ணன் கொடுக்கும் கொடையையே துலாபாரம் நிறுத்தினால் கூட, இசையின் தட்டு தாழ்ந்தே இருக்கும் ! அப்படி ஒரு தரம் ! ஒவ்வொரு பாடலும் கர்நாடக இசைப் பின்னணியில் மனதை மயக்குகின்றன. கவியரசரின் பாடல்கள் தனிநிறம் காட்டும் ! சொல்லவே தேவையில்லை ! "வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான் மனைவியின் வழக்...

நிலாக் கால நினைவுகள் - 13

Image
'மாலையும்  இரவும்  சந்திக்கும்  இடத்தில்'  சகோதரி லதா இன்று என் நினைவுகளை மலர்விக்க நினைந்து அனுப்பிய ஒரு அற்புதமான பாடல் !  1961  இல் வெளிவந்த 'பாசம்' திரைப்படத்தின் பல இனிமையான பாடல்களில் இது என் மனம் கவர்ந்த ஒன்று. இந்தப் படத்தை நாங்கள் பார்த்தது 1961  இல் தான் ! மறக்கமுடியுமா அந்த இனிமையான நாளை ! எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் என்றால் அவை அமுத கானமாகத்தான் இருக்கும். பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்க விரும்புவேன் ! 1964 க்கு மேல் பல படங்களை  மாமாவின் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க வளாகத்தில் பார்த்ததுண்டு. அப்படி, மாமா கூட்டிச் சென்ற ஒரு படம்தான் 'பாசம்' ! இசை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி.  பாடல் கவியரசர் கண்ணதாசன்!  மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடியவர்கள் திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜானகியம்மா ! இனிமையான குரல்கள் ! நல்ல பொருத்தம் !  இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் கல்யாண்குமார் மற்றும் ஷீலா ! பொருத்தமான நடிப்பு ! விரசமில்லாத காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் நடிப்பு.! இன்னும் என் நினைவில் உள்ளது , ...

நிலாக் கால நினைவுகள் - 12

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே"  இந்த நாட்டியப் போட்டியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ! நீங்கள் பார்த்ததுண்டா ?  இசையும், முகபாவங்களும், பொலபொலவென மத்தாப்பூக் கதிர்களாய் உதிரும் நாட்டியத்தின் விரைவசைவுகளும் என்றும் மனதில் நிற்கும்.  போட்டிக்கேற்ற கேள்வி பதில்களாய் பாடல் வரிகள் ! எப்படித்தான் எழுத முடிந்ததோ என்று வியக்க வைக்கும் ! கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் எளிமையான அதே சமயம் அழுத்தமான வரிகள் ! பி.லீலா மற்றும் ஜிக்கி இருவரின் இனிமையான மற்றும் வளமான குரல்கள் ! மனதை மயக்கும் அற்புதமான இசையை நமக்கு அளித்திருப்பவர் சி. ராமச்சந்திரா.  பத்மினி  மற்றும் வைஜயந்திமாலா இருவரின் மனம் கவரும் நாட்டியம் !  படத்தின் பெயர் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' .  குறைந்த வசதிகளே கொண்ட கீற்றுக் கொட்டகையில் படத்தைப் பார்த்த அந்தக் காலகட்டங்கள்தான் எத்தனை மகிழ்ச்சியானவை ! இன்று நினைத்தாலும் சுவை குன்றாத சுந்தர நினைவுகள் !  மனதைப் பந்தாட வைக்கும் அந்த இனிமையான இசையும் , துள்ளல் நாட்டியமும் இன்றைக்கு நினைத்தாலும் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன ! ...