நிலாக்கால நினைவுகள் - 16

கிரிதர கோபாலா - மயக்கு மோகனம்
Vocal by Smt M.S.Subbulakshmi - Song Giridhara Gopala given below:



M S Subbulakshmi's Meera song Giridhara Gopala in WHISTLE. An Excellent rendition.  

இம்மியளவும் பிசகின்றி 'விசில்' அடித்துள்ளார். கேட்கும்போது என் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. நான் மறுபடியும் எனது ஐந்தாம் வயதுக்குச் சென்றுவிடுகிறேன். இசை மட்டும் என்னை மயக்கவில்லை, எண்ணங்களும்தான் !  அம்பத்தூர் மௌனஸ்வாமிகள் மடத்து வீட்டில்,  சந்திரா அத்தை,  ஒரு காலை நேரத்தில்  சமையல் பண்ணிக் கொண்டே,  மேலிருக்கும் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தவாறே,  இந்தப் பாடலைத் தன் இனிமையான குரலில் பாடிக் கொண்டிருக்கும் காட்சி கனவுபோல் புகைப்படலங்களிலூடே என் கண் முன்னே விரிகிறது !  என்ன ஒரு மதூரமான குரலும்,  பாடலும்!

குமுட்டி அடுப்பில் வேகும் பருப்பு பொங்கி வழியும் சப்தமும் அந்தக் கருகிய வாசனையும் பாடலை அவசரமாய் முடிக்கச் செய்ததின் ஏமாற்றம் என் மனதில் ! நான் பின்னால் நின்றுகொண்டு பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததில் அத்தை அடைந்த மகிழ்ச்சி அளவற்றதாயிருந்தது இன்னும் என் நினைவில்  பசுமையாய் !    மோகன ராகத்தை எனக்கு அத்தை அறிமுகப்படுத்தியது  இந்தப் பாடலின் மூலம்தான்  !   இந்தக் காணொளியை இன்று எனக்கு அனுப்பி மகிழ்வித்த  தம்பி பாபுவுக்கு நன்றி  !

கி. பாலாஜி
ஜனவ‌ரி 15 2019
பொங்கல் திருநாள்

Comments

Popular posts from this blog

நிலாக் கால நினைவுகள் - 13

நிலாக் கால நினைவுகள் - 10

எண்ணத்திலே ஓசைகள்.......