Posts

எண்ணத்திலே ஓசைகள்.......

Image
எண்ணத்திலே ஓசைகள்..... வருடம் 1968. ஒரு தொலைவான இடத்திற்கான, என் முதல் ரயில் பயணம் அம்மாவுடன்செய்தது என்றால், அது குடியாத்தத்திற்குதான் !  17 வயதில் அம்மாவையும் கூட்டிக்கொண்டு நான் பயணம் புறப்பட்டது வீட்டில் அத்தை, சித்தப்பா, தாத்தா அனைவருக்கும் சற்று கலவரமாகவே இருந்தது.  உலகம் தெரியாமல் குழந்தைகளை வளர்த்து விடுவது அந்தக் காலம். அப்படித்தான் ஒன்றுமறியாத சிறு பையனாக 18 வயது வரை வளர்ந்தேன் நான் ! மிகுந்த பயத்துடன் தான் என்னை அனுப்பி வைத்தார்கள் . அம்மாவை அங்கு, மாமா வீட்டில் விட்டுவிட்டு தனியாக திரும்ப சென்னை வரவேண்டுமே என்ற கவலை!    நான் அங்கு கழித்த அந்த நான்கு நாட்களும் மறக்க முடியாதவை. என்னை நான் மிகவும் சுதந்திரமான மனிதனாக உணர்ந்தேன் . சென்னை வெயிலோடு வித்தியாசப்படுத்திப் பார்த்தோமானால்,  அது ஒரு குளிர் பிரதேசமாக தான் இருந்தது அப்போது ! கிராமம் என்றும் சொல்ல முடியாது, நகரம் என்றும் சொல்ல முடியாது.  அப்படிப்பட்ட ஒரு இடம். காலை எழுந்து காபி குடித்தவுடன் வீட்டைச் சுற்றியிருந்த தெருக்களை எல்லாம் ஒரு வலம் வருவது வழக்கமாயிருந்தது. அத்தனை வீட்டு திண்ணையிலும் பெண்களும் குழந்த

நிலாக்கால நினைவுகள்- 17

நிலாக்கால நினைவுகள் - 17 "கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா உன்  காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா" - மயக்க வைக்கும் வரிகள் ! ஏதோ பார்த்துப் பார்த்துச் சலித்த ஒரு ஸீரியலையே திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது முடிந்த அடுத்த கணம் காணக்கிடைத்த அருமையான பாடல் காட்சி இது! இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கும? சலிக்குமா?  கவியரசரின் வைர வரிகள்!  முத்துச் சலங்கை முன்வந்து கொஞ்சும் கிளி எனப் பொழியும் திரையிசைத் திலகம் கே.வி.எம்.மின் இசை , அட்டகாசமான அடாணா ராகத்தில் !  அந்த ராகத்தின் கம்பீரத்தைப் பதம் பார்க்கும் திறனுள்ள ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ்.ஸின் கணீரென்ற குரல் !  அனைத்துக்கும் இணை சேர்க்கும் சிம்மக்குரலோன் சிவாஜியின் அபார நடிப்பு ! இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்றைய மாலைப் பொழுதை மேலும் அழகாக்கின.  மனம் எங்கோ கடந்த காலத்துக்கு பறந்து பறந்து சென்றது, ஏறக்குறைய 455 வருடங்கள் பின்னோக்கி! பள்ளிக்காலத்தில் கொட்டகையில் பார்த்த பல படங்களில் ஒன்று மகாகவி காளிதாஸ் நான் காண ஆசைப்பட்ட எல்லா படங்களுக்கும் கூட்டி செல்வார் , தன் மக்களையும் விட என்னிட

'ரீ யூனியன்' நினைவுகள்

Image
ரீ யூனியன் நினைவுகள் மொபைல் போன் அடித்து ஓய்ந்தது. அவன், அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்தான், ஏதோ யோசனையில் மூழ்கியவாறு ! ! சிந்தனை எங்கோ பறந்து கொண்டிருந்தது. திரும்பவும் போன் அடித்தது. மனைவி ஓடிவந்து “போன் அடிக்கிறது பாருங்கள் . ஹியரிங் எய்ட் ஒண்ணு வாங்கிக் கொடுத்திருக்கான் மாப்பிள்ளை அதை மாட்டிக்கறதே இல்லை” என்று அங்கலாய்த்தாள். போனை எடுத்து நீட்டினாள்.  உடனேயே இயர் போனை எடுத்து மாட்டிக் கொண்டவன் பேசத்தொடங்கினான். “ஹலோ யார் பேசறது?” “ஹலோ, யாரு பாலாஜியா? என் குரல்புரியறதா?” “ரொம்பப் பரிச்சயமான குரல்தான்! ஒரு நிமிஷம்……அடேய்! கிருஷ்ணமூர்த்தியா?” “ எப்படி கண்டுபிடிச்ச? நாம் பார்த்தோ பேசியோ குறஞ்சது நாற்பது வருஷமாவது ஆகியிருக்குமே!” "ஆமாம்! அந்தக் காலத்து ஆர்மோனியப் பொட்டி மாதிரி எட்டுக் கட்டை குரல் வேறு யாருக்கு வரும்?  பழகிப்போன குரல்!  உடனே கண்டுபிடிச்சிட்டேன் . அது சரி!  நீ எப்படி இருக்க? எத்தனை வருஷம் ஆச்சு? எங்க இருக்க? என்ன செய்ற? என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?" "எல்லாம் விவரமா சொல்றேன்டா ! அவசரப்படாதே!  மெட்ராஸ்ல நீ வேல பார்த்த க

"அய்யருக்கு இவ்வளோ பெரிய பையனா?"

Image
வருடம் 1973. என் சித்தப்பா கே நடராஜன் அவர்கள் (அய்யர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்) கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் .  கவிஞரைப் பற்றி அவர் என்னிடம் பேசாத நாளில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் வளர்ந்தது சித்தப்பாவிடம் தான் ! அந்த 14 முதல் 22 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் என்னை உருவாக்கி எடுத்தவர் அவர்தான் . எப்படி மனிதர்களிடம் பேசவேண்டும், பழகவேண்டும், நடத்தைகள் எப்படி இருத்தல் வேண்டும் என்று அனைத்தையும் சொல்லித் தந்து மெருகேற்றியவர் அவரே.  கவிஞரிடம் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.  ஒரு சமயம் சித்தப்பாவுக்கு நல்ல காய்ச்சல்.  இரண்டு நாட்களாக வேலைக்கு செல்ல இயலவில்லை . மாதத்தின் முதல் வாரம் . பணத்தேவை . வேலைக்குச் செல்லாததால் சம்பளம் வாங்க முடியவில்லை . அப்போதுதான் கவிஞரின் அலுவலகத்திற்கு போன் செய்து சொன்ன பிறகு என்னை அங்கு அனுப்பிப் பணத்தை வாங்கி வரச்சொன்னார். எனக்கு வயது 20 ஆகியிருந்தாலும் நான் ஒரு மௌனி .அதிகம் பேச பயப்படுவேன். 'இந்த பயமும் கூச்சமும் உனக்கு இருக்கக்கூடாது . நாலு பேரிடம் பேசிப் பழகினால் தான் சரியாகும்'  என்

உலர்ந்த சருகின் உற்சாகம்

Image
உலர்ந்த சருகின் உற்சாகம் ! ************************** உலர்ந்த சருகாகி யோர் மூலையில் விழுந்துவிட்டேன்! பயனற்ற பொருளாகி யோர்  பாரமாய் நின்றுவிட்டேன் ! பட்டயம் கட்டப்பட்ட பல்லக்குக் குதிரை யொன்று பார்க்கவோ ராளின்றிப் பாதையின் ஓரத்தில் பரிதவித்து நிற்கிறது ! காலத்தின் மாற்றத்தால் கண்ணியங்கள் மறக்கப்படும்! கற்பூரம்போலக் காற்றில் கரைக்கப்படும்! என்றாலும் மனத்தின் ஏதோவோர் மூலையிலே நம்பிக்கையின் கீற்றொன்று மெல்லப் புறப்பட்டு மேனியைச் சிலிர்க்க வைக்கும்! மேன்மைகள் நிலைக்கவைக்கும்! கடந்த காலத்தின் சிறப்பெல்லாம் கல்லோவிய மாகிக் களிக்கவைக்கும்! கண்களைக் குளிரவைக்கும்! Above is a translation of the following poem by Lily Swarn: A leaf of life I shrivelled up and aged Useless and burdensome A horse put to paddock Blown away to a corner Soon  to be forgotten A lost hope Copyright Lily Swarn 13.10.2016 Picture by Lily Swarn

நிலாக்கால நினைவுகள் - 16

கிரிதர கோபாலா - மயக்கு மோகனம் Vocal by Smt M.S.Subbulakshmi - Song Giridhara Gopala given below: M S Subbulakshmi's Meera song Giridhara Gopala in WHISTLE. An Excellent rendition.   இம்மியளவும் பிசகின்றி 'விசில்' அடித்துள்ளார். கேட்கும்போது என் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. நான் மறுபடியும் எனது ஐந்தாம் வயதுக்குச் சென்றுவிடுகிறேன். இசை மட்டும் என்னை மயக்கவில்லை, எண்ணங்களும்தான் !  அம்பத்தூர் மௌனஸ்வாமிகள் மடத்து வீட்டில்,  சந்திரா அத்தை,  ஒரு காலை நேரத்தில்  சமையல் பண்ணிக் கொண்டே,  மேலிருக்கும் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தவாறே,  இந்தப் பாடலைத் தன் இனிமையான குரலில் பாடிக் கொண்டிருக்கும் காட்சி கனவுபோல் புகைப்படலங்களிலூடே என் கண் முன்னே விரிகிறது !  என்ன ஒரு மதூரமான குரலும்,  பாடலும்! குமுட்டி அடுப்பில் வேகும் பருப்பு பொங்கி வழியும் சப்தமும் அந்தக் கருகிய வாசனையும் பாடலை அவசரமாய் முடிக்கச் செய்ததின் ஏமாற்றம் என் மனதில் ! நான் பின்னால் நின்றுகொண்டு பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததில் அத்தை அடைந்த மகிழ்ச்சி அளவற்றதாயிருந்தது இன்னும்

நிலாக்கால நினைவுகள் - 15

Image
"காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் -" எனது நேற்றைய இரவுப்பாடல்களில் ஒன்று இதுவாக இருந்தது. மனம் மகிழ்ந்தது. வழக்கம் போல் மனம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்குப் பறந்து சென்றது. இதுவும் அம்பத்தூர் கிருஷ்ணா டென்ட் தான்! பள்ளிப்பாடங்களில் வருகின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படம் என்பதால் பள்ளியில் சிறப்புச் சலுகை கொடுத்து இந்தப் படத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் செல்ல இயலவில்லை. நான்கு நாட்கள் கழித்து மாமா குழந்தைப் பட்டாளங்களைக் கூட்டிச்சென்று காண்பித்த படம் ! விஷயத்துக்கு வருவோம்! 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் மகாகவி பாரதியார் எழுதிய வரிகள் இந்த மகத்தான காதல் கவிதை, சிந்தை மயக்கும் விந்தை புரிந்தது திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையிலும், பி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலா அவர்களின் தேனையொத்த தீங்குரலிலும் ! இதற்குப்பிறகு, இசையறிந்த ஒவ்வொருவரின் உதடுகளிலும், இந்தப்பாடல் புகுந்து புறப்படாமல் இருந்ததே இல்லை எனலாம் ! இந்த இசை மேலாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்