நிலாக் கால நினைவுகள் - 13

'மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்' சகோதரி லதா இன்று என் நினைவுகளை மலர்விக்க நினைந்து அனுப்பிய ஒரு அற்புதமான பாடல் ! 1961 இல் வெளிவந்த 'பாசம்' திரைப்படத்தின் பல இனிமையான பாடல்களில் இது என் மனம் கவர்ந்த ஒன்று. இந்தப் படத்தை நாங்கள் பார்த்தது 1961 இல் தான் ! மறக்கமுடியுமா அந்த இனிமையான நாளை ! எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் என்றால் அவை அமுத கானமாகத்தான் இருக்கும். பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்க விரும்புவேன் ! 1964 க்கு மேல் பல படங்களை மாமாவின் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க வளாகத்தில் பார்த்ததுண்டு. அப்படி, மாமா கூட்டிச் சென்ற ஒரு படம்தான் 'பாசம்' ! இசை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி. பாடல் கவியரசர் கண்ணதாசன்! மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடியவர்கள் திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜானகியம்மா ! இனிமையான குரல்கள் ! நல்ல பொருத்தம் ! இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் கல்யாண்குமார் மற்றும் ஷீலா ! பொருத்தமான நடிப்பு ! விரசமில்லாத காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் நடிப்பு.! இன்னும் என் நினைவில் உள்ளது , ...