நிலாக்கால நினைவுகள் - 5

'வார்டனின்' அன்பு ! https://www.youtube.com/watch?v=_uAE2d0u3Ko 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' - என்ன ஒரு அற்புதமான பாடல் ! 'திருவருட்செல்வர்' படத்திலிருந்து! எனது பழைய நினைவுகளுக்குப் புதிய வண்ணம் தீட்டும்பல பாடல்களில் இதுவும் ஒன்று ! 1967 தீபாவளி ஸீஸன் ! அப்போது நான் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் சேர்ந்த புதிது. "வெளியுலகம் தெரிய வேண்டும், மனிதர்களுடன் பழக வேண்டும் , அறியாத பிள்ளையாயிருக்கிறான்" என்று பல காரணங்கள் சொல்லி என் விருப்பத்திற்கு மாறாக கல்லூரி விடுதியிலேயே என்னைத் தங்கவைத்து விட்டார்கள். எனது குழந்தைத்தனமான சுபாவம் 'ஹாஸ்டல் வார்டனுக்கு' மிகவும் பிடித்துப் போய் நான் அவரது செல்லப் பிள்ளையாகிவிட்டேன். எனக்கு மட்டும் வாராவாரம் சனிக்கிழமை வீட்டுக்குச் செல்ல அனுமதி கொடுப்பார். மற்றவருக்கெல்லாம் மாதம் ஒரு முறைதான்! சக நண்பர்களுக்கு ஒரு பக்கம் பொறாமையும், ஒரு பக்கம் பரிகாசமாகவும் இருக்கும்! ஒவ்வொரு முறை திங்களன்று காலேஜ் போக சுணங்கியதும் சித்தப்பா ஆதரவுடன் தட்டிக் கொடுத்து லீவு எடுக்க அனுமதித்ததும், லீவு லெட்டர் கொடுத்ததும் ம...