நிலாக்கால நினைவுகள்- 17
நிலாக்கால நினைவுகள் - 17 "கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா" - மயக்க வைக்கும் வரிகள் ! ஏதோ பார்த்துப் பார்த்துச் சலித்த ஒரு ஸீரியலையே திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது முடிந்த அடுத்த கணம் காணக்கிடைத்த அருமையான பாடல் காட்சி இது! இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கும? சலிக்குமா? கவியரசரின் வைர வரிகள்! முத்துச் சலங்கை முன்வந்து கொஞ்சும் கிளி எனப் பொழியும் திரையிசைத் திலகம் கே.வி.எம்.மின் இசை , அட்டகாசமான அடாணா ராகத்தில் ! அந்த ராகத்தின் கம்பீரத்தைப் பதம் பார்க்கும் திறனுள்ள ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ்.ஸின் கணீரென்ற குரல் ! அனைத்துக்கும் இணை சேர்க்கும் சிம்மக்குரலோன் சிவாஜியின் அபார நடிப்பு ! இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்றைய மாலைப் பொழுதை மேலும் அழகாக்கின. மனம் எங்கோ கடந்த காலத்துக்கு பறந்து பறந்து சென்றது, ஏறக்குறைய 455 வருடங்கள் பின்னோக்கி! பள்ளிக்காலத்தில் கொட்டகையில் பார்த்த பல படங்களில் ஒன்று மகாகவி காளிதாஸ் நான் காண ஆசைப்பட்ட எல்லா படங்களுக்கும் கூட்டி செல்வார் , தன் மக...