நிலாக் கால நினைவுகள் - 8

' மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் ' சகோதரி லதாவின் இன்றைய தேர்வு மேற்கண்ட பாடல் ! கேட்கும்போதே மனம் பறக்கிறது பின்னோக்கி ! நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். அம்பத்தூர் 'கிருஷ்ணா' கீற்றுக் கொட்டகையில் பார்த்த படம். அந்த மைதானமும், நடுவில் கொட்டகையும், மாட்டு வண்டியில் படத்தின் விளம்பர ஓசையும், காட்சிகளாகக் கண்முன்னே விரிகின்றன ! மறக்க முடியாத வெற்றிப் படமான பாசமலர் படத்தின் ஒரு அருமையான பாடல் . அந்தக் காலத்தில் ஒரு வெற்றி பெற்ற படமானால் அத்தனை பாடல்களும் நன்றாகவே இருக்கும். நடிப்பைச் சொல்வதா, கதையைச் சொல்வதா, இசையைச் சொல்வதா , இன்முக நடிகர் தேர்வைச்சொல்வதா, வசனத்தைச் சொல்வதா , பாடல் வரிகளைச் சொல்வதா, இயக்கத்தைச் சொல்வதா, இன்னொளிப் பதிவின் தரத்தைச் சொல்வதா .......ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்ட அக்காலத்திய திரைப் படங்கள் மகத்தான திரைக் காவியங்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை ! மேற்கூறிய இத்தனை விஷயங்களும் இந்த ஒரு பாடலிலேயே அடங்கிவிடும் என்று சொன்னால் மிகையாகாது. இசையும் வ...