Posts

Showing posts from June, 2020

நிலாக்கால நினைவுகள்- 17

நிலாக்கால நினைவுகள் - 17 "கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா உன்  காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா" - மயக்க வைக்கும் வரிகள் ! ஏதோ பார்த்துப் பார்த்துச் சலித்த ஒரு ஸீரியலையே திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது முடிந்த அடுத்த கணம் காணக்கிடைத்த அருமையான பாடல் காட்சி இது! இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கும? சலிக்குமா?  கவியரசரின் வைர வரிகள்!  முத்துச் சலங்கை முன்வந்து கொஞ்சும் கிளி எனப் பொழியும் திரையிசைத் திலகம் கே.வி.எம்.மின் இசை , அட்டகாசமான அடாணா ராகத்தில் !  அந்த ராகத்தின் கம்பீரத்தைப் பதம் பார்க்கும் திறனுள்ள ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ்.ஸின் கணீரென்ற குரல் !  அனைத்துக்கும் இணை சேர்க்கும் சிம்மக்குரலோன் சிவாஜியின் அபார நடிப்பு ! இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்றைய மாலைப் பொழுதை மேலும் அழகாக்கின.  மனம் எங்கோ கடந்த காலத்துக்கு பறந்து பறந்து சென்றது, ஏறக்குறைய 455 வருடங்கள் பின்னோக்கி! பள்ளிக்காலத்தில் கொட்டகையில் பார்த்த பல படங்களில் ஒன்று மகாகவி காளிதாஸ் நான் காண ஆசைப்பட்ட எல்லா படங்களுக்கும் கூட்டி செல்வார் , தன் மக...

'ரீ யூனியன்' நினைவுகள்

Image
ரீ யூனியன் நினைவுகள் மொபைல் போன் அடித்து ஓய்ந்தது. அவன், அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்தான், ஏதோ யோசனையில் மூழ்கியவாறு ! ! சிந்தனை எங்கோ பறந்து கொண்டிருந்தது. திரும்பவும் போன் அடித்தது. மனைவி ஓடிவந்து “போன் அடிக்கிறது பாருங்கள் . ஹியரிங் எய்ட் ஒண்ணு வாங்கிக் கொடுத்திருக்கான் மாப்பிள்ளை அதை மாட்டிக்கறதே இல்லை” என்று அங்கலாய்த்தாள். போனை எடுத்து நீட்டினாள்.  உடனேயே இயர் போனை எடுத்து மாட்டிக் கொண்டவன் பேசத்தொடங்கினான். “ஹலோ யார் பேசறது?” “ஹலோ, யாரு பாலாஜியா? என் குரல்புரியறதா?” “ரொம்பப் பரிச்சயமான குரல்தான்! ஒரு நிமிஷம்……அடேய்! கிருஷ்ணமூர்த்தியா?” “ எப்படி கண்டுபிடிச்ச? நாம் பார்த்தோ பேசியோ குறஞ்சது நாற்பது வருஷமாவது ஆகியிருக்குமே!” "ஆமாம்! அந்தக் காலத்து ஆர்மோனியப் பொட்டி மாதிரி எட்டுக் கட்டை குரல் வேறு யாருக்கு வரும்?  பழகிப்போன குரல்!  உடனே கண்டுபிடிச்சிட்டேன் . அது சரி!  நீ எப்படி இருக்க? எத்தனை வருஷம் ஆச்சு? எங்க இருக்க? என்ன செய்ற? என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?" "எல்லாம் விவரமா சொல்றேன்டா ! அவசரப்படாதே!  மெட்ராஸ்ல நீ வேல ...