Posts

Showing posts from 2019

உலர்ந்த சருகின் உற்சாகம்

Image
உலர்ந்த சருகின் உற்சாகம் ! ************************** உலர்ந்த சருகாகி யோர் மூலையில் விழுந்துவிட்டேன்! பயனற்ற பொருளாகி யோர்  பாரமாய் நின்றுவிட்டேன் ! பட்டயம் கட்டப்பட்ட பல்லக்குக் குதிரை யொன்று பார்க்கவோ ராளின்றிப் பாதையின் ஓரத்தில் பரிதவித்து நிற்கிறது ! காலத்தின் மாற்றத்தால் கண்ணியங்கள் மறக்கப்படும்! கற்பூரம்போலக் காற்றில் கரைக்கப்படும்! என்றாலும் மனத்தின் ஏதோவோர் மூலையிலே நம்பிக்கையின் கீற்றொன்று மெல்லப் புறப்பட்டு மேனியைச் சிலிர்க்க வைக்கும்! மேன்மைகள் நிலைக்கவைக்கும்! கடந்த காலத்தின் சிறப்பெல்லாம் கல்லோவிய மாகிக் களிக்கவைக்கும்! கண்களைக் குளிரவைக்கும்! Above is a translation of the following poem by Lily Swarn: A leaf of life I shrivelled up and aged Useless and burdensome A horse put to paddock Blown away to a corner Soon  to be forgotten A lost hope Copyright Lily Swarn 13.10.2016 Picture by Lily Swarn

நிலாக்கால நினைவுகள் - 16

கிரிதர கோபாலா - மயக்கு மோகனம் Vocal by Smt M.S.Subbulakshmi - Song Giridhara Gopala given below: M S Subbulakshmi's Meera song Giridhara Gopala in WHISTLE. An Excellent rendition.   இம்மியளவும் பிசகின்றி 'விசில்' அடித்துள்ளார். கேட்கும்போது என் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. நான் மறுபடியும் எனது ஐந்தாம் வயதுக்குச் சென்றுவிடுகிறேன். இசை மட்டும் என்னை மயக்கவில்லை, எண்ணங்களும்தான் !  அம்பத்தூர் மௌனஸ்வாமிகள் மடத்து வீட்டில்,  சந்திரா அத்தை,  ஒரு காலை நேரத்தில்  சமையல் பண்ணிக் கொண்டே,  மேலிருக்கும் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தவாறே,  இந்தப் பாடலைத் தன் இனிமையான குரலில் பாடிக் கொண்டிருக்கும் காட்சி கனவுபோல் புகைப்படலங்களிலூடே என் கண் முன்னே விரிகிறது !  என்ன ஒரு மதூரமான குரலும்,  பாடலும்! குமுட்டி அடுப்பில் வேகும் பருப்பு பொங்கி வழியும் சப்தமும் அந்தக் கருகிய வாசனையும் பாடலை அவசரமாய் முடிக்கச் செய்ததின் ஏமாற்றம் என் மனதில் ! நான் பின்னால் நின்றுகொண்டு பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்ததில் அ...