Posts

Showing posts from March, 2020

"அய்யருக்கு இவ்வளோ பெரிய பையனா?"

Image
வருடம் 1973. என் சித்தப்பா கே நடராஜன் அவர்கள் (அய்யர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்) கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் .  கவிஞரைப் பற்றி அவர் என்னிடம் பேசாத நாளில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் வளர்ந்தது சித்தப்பாவிடம் தான் ! அந்த 14 முதல் 22 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் என்னை உருவாக்கி எடுத்தவர் அவர்தான் . எப்படி மனிதர்களிடம் பேசவேண்டும், பழகவேண்டும், நடத்தைகள் எப்படி இருத்தல் வேண்டும் என்று அனைத்தையும் சொல்லித் தந்து மெருகேற்றியவர் அவரே.  கவிஞரிடம் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.  ஒரு சமயம் சித்தப்பாவுக்கு நல்ல காய்ச்சல்.  இரண்டு நாட்களாக வேலைக்கு செல்ல இயலவில்லை . மாதத்தின் முதல் வாரம் . பணத்தேவை . வேலைக்குச் செல்லாததால் சம்பளம் வாங்க முடியவில்லை . அப்போதுதான் கவிஞரின் அலுவலகத்திற்கு போன் செய்து சொன்ன பிறகு என்னை அங்கு அனுப்பிப் பணத்தை வாங்கி வரச்சொன்னார். எனக்கு வயது 20 ஆகியிருந்தாலும் நான் ஒரு மௌனி .அதிகம் பேச பயப்படுவேன். 'இந்த பயமும் கூச்சமும் உனக்கு இருக்கக்கூடாது . நாலு பேரிடம் பேசிப் பழகினால் தான் சரிய...